இன்று முதல் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் விநியோகிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால் வங்கிகள் மட்டுமின்றி ஏடிஎம்-களிலும் இனி புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. ஆனால் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்-களில் நிரப்புவதற்காக தொழில்நுட்பத்தில் சிறிது காலம் தேவைப்பட்டதால் இதுவரை 2000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்-களில் கிடைக்கவில்லை. இந்நிலையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் ஏடிஎம்-களில் விநியோகிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால் இன்று முதல் வங்கிகள் மட்டுமின்றி ஏடிஎம்-களிலும் இனிமேல் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
இதனிடையே, தமிழகத்தில் இன்று வரை புதிய 500 ரூபாய் நோட்டுகளை மக்கள் புழக்கத்திற்கு வரவில்லை. ஆனால் நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள ஏடிஎம்-களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கிறது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள வங்கிகளில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் எனத் தெரிகிறது. தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கப்பெறுவதால் சில்லறை கிடைக்காமல் தவிக்கும் மக்கள் 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்தால் ஓரளவு நிம்மதி அடைவார்கள்.
‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..!
சச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..!
கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது
“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..!
"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!