[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

jayalalaithaa-letter-to-pm-for-fishermen-issue

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 27 மீனவர்களையும் விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்துவருவது துரதிருஷ்டவசமானது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கடந்த 11 ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடலில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச எல்லை கோடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவலையில் உள்ளது. மேலும், இந்தியா இலங்கை ஏற்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து எனது சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்களையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 71 படகுகளையும் விடுவிப்பதற்கு வெளியுறவு துறை மூலம் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close