[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

கோவில் உண்டியலில் 500, 1000 ரூபாய் நோட்டுகளாக ரூ.44 லட்சம்!

rs-44-lakh-at-vellore-temple-piggy

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் உண்டியலில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய 44 லட்சம் ரூபாயை ஒருவர் போட்டுள்ளார். இது கருப்புப் பணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கோடு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதற்கு மாறாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மக்கள் தங்களிடம் உள்ள பணங்களை மாற்றி வருகின்றனர். அவ்வாறு மக்கள் செலுத்தும் தொகையை பொறுத்து வரியும், 200 சதவிகிதம் வரை அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் உண்டியலில் ஒருவர் ரூ. 44 லட்சம் போட்டுள்ளார். வழக்கமாக நாள்தோறும் உண்டியல் பணம் எண்ணப்படுவது வழக்கம். அவ்வாறு உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டபோது ஆயிரம் ரூபாய் கட்டுகள் 30 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட 28 கட்டுகள். உண்டியலில் போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close