[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் நின்றவர்கள் மீது கார் மோதல்...3 பேர் படுகாயம்

three-injured-car-rams-into-crowd-in-coimbatore

கோவையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி வாசலில் வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சின்னி‌யம்பாளையம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது பீளமேடு பகுதியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற கார் ஒன்று, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது. இதில், அந்த காரானது கூட்டத்தில் இருந்தவர்கள் மீது மோதியதில், கர்ப்பிணிப் பெண், 2 குழந்தைகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close