[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

உடல்நலக்குறைவால் அப்போலோவில் துரைமுருகன் அனுமதி

durai-murugan-admitted-in-apollo-hospital

திமுக மூத்த தலைவரான துரைமுருகன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் திமுக மூத்த தலைவரு‌மான துரைமுருகன், திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக துரைமுருகன் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் உடனடியான துரைமுருகன் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். துரைமுருகனின் உடல் நலம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா, திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close