[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

சென்னையில் கனமழை... ஏஎடிஎம்-கள் முன் மக்கள் அவதி

heavy-rain-in-chennai

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பணத்திற்காக, பெரும்பாலான ஏடிஎம்-கள் முன்பு காத்திருக்கும் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருந்தாலும் கடந்த சில தினங்களாக சென்னையில் மழை ஏதும் பெய்யவில்லை. சென்னையை தவிர தமிழகத்தின் ஒருசில இடங்களில் மட்டும் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதனால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் சென்னையின் பெரும்பாலான இடங்களில் இன்று காலை முதல் கனமழை செய்து வருகிறது. சென்னை பட்டினப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, குரோம்பேட்டை, மயிலாப்பூர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், போரூர், ஆவடி, அண்ணாநகர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில தினங்களாக சென்னையில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட ஏடிஎம்-கள் திறந்திருந்தாலும் அவற்றில் போதுமான பணம் இல்லை. இதனால் மக்கள் பணம் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையும் ஏடிஎம்-கள் முன்பு பணம் எடுக்க காத்திருந்த மக்கள் திடீரென பெய்த கனமழையால் சிறிது சிரமப்பட்டனர். இருப்பினும் கடந்த சில தினங்களாக பெய்யாமல் இருந்த மழை தற்போது திடீரென பெய்ததால் சற்று மகிழ்ச்சியும் அடைந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close