[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இருந்த நோய்த் தொற்றுகள் குணமடைந்து விட்டன: பிரதாப் ரெட்டி

prathap-c-reddy-about-chief-minister-jayalalithaa-health-conditions

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இருந்த நோய்த் தொற்றுகள் குணமடைந்து விட்டதாக அப்போலோ குழும நிர்வாகத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கும் அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அப்போலோ மருத்துவமனை சென்று வருகின்றனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அவ்வப்போது மருத்துவனை தரப்பில் இருந்தும் அறிக்கைகள் வந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ குழும நிர்வாகத் தலைவர் பிரதாப் ரெட்டி , முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இருந்த நொய்த் தொற்றுகள் முழுமையாக குணமடைந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் நல்ல உடல் நலத்துடனும், மனதளவிலும் உடலளவிலும் திடமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பப் படியே அவர் வேறு வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும், மருத்துவமனையிலிருந்து எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close