[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்

தமிழகத்தில் இரண்டு நாட்களில் ரூ.1300 கோடி டெபாசிட்

deposit-amount-is-1300-crore-in-bank

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1,300 கோடி ரூபாய் வரை பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் கடந்த 10-ஆம் முதல் வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள, டெபாசிட் செய்து வருகின்றனர்.

இதனையடுத்து தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1,300 கோடி ரூபாய் வரை பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்துள்ளார். வங்கிகளில் கொடுத்து மாற்றப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை மற்றும் அதற்கான தொகை குறித்த முழு விவரங்கள் திங்கட்கிழமை தெரிய வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புழக்கத்தில் இருக்கும் 2,300 கோடி எண்ணிக்கையில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டு முற்றிலுமாக ஆர்.பி.ஐயால் அழிக்கப்படும் என்று கூறிய சதக்கத்துல்லா, கடந்த இரண்டு நாட்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்.பி.ஐயில் தங்களிடம் உள்ள 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மாற்றி உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close