[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

பணத்திற்காக ஏடிஎம்-கள் முன் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்

people-in-front-of-atm-to-get-money

தமிழகத்தின் ஒருசில இடங்களில் உள்ள ஏடிஎம்-கள் செயல்படாத காரணத்தினால், பணம் வரும் ஏடிஎம் மையங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் கடந்த 10-ஆம் முதல் வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

புதிய ருபாய் நோட்டுகளை ஏடிஎம்-களில் நிரப்புவதற்கு ஏதுவாக கடந்த 9, 10 ஆகிய இரண்டு தேதிகளில் நாடெங்கும் உள்ள ஏடிஎம்-கள் செய்லபடவில்லை. நேற்று முதல் ஏடிஎம்-கள் மீண்டும் தங்களது சேவையை தொடங்கியுள்ளன. ஆனால் தமிழகத்தின் ஒருசில இடங்களில் உள்ள ஏடிஎம்-கள் நேற்றும் செயல்படவிலை. ஒருசில ஏடிஎம்-கள் திறந்திருந்தாலும் பணம் வரவில்லை. இதேநிலை தான் இன்றும் நீடித்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள ஏடிஎம்-களில் மக்கள் தங்களது பணத்தை செலுத்தும் வசதி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. பணத்தை மக்களால் பெறமுடியவில்லை. இதனால் பணம் வரும் ஏடிஎம் மையங்களில், மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இத்தகைய ஏடிஎம்-களில் மக்கள் அதிகப்படியாக பணம் எடுப்பதால் விரைவிலேயே பணமும் காலியாகி விடும் சூழ்நிலையும் உள்ளது.

தங்களது வங்களிலும் பணம் இருந்தும் ஒருசில ஏடிஎம்-கள் செயல்படாத காரணத்தினால் பணம் எடுப்பதற்காக மக்கள் இன்றும் சிரமப்பட்டு தான் வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close