[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

ஏடிஎம்-களில் புதிய 500, 2000 நோட்டுகள் வராததால் மக்கள் ஏமாற்றம்

atm-machines-not-delivers-500-1000-rs-notes

தமிழகத்தின் பெரும்பாலான ஏடிஎம்-களில் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றில் இருந்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளிவரவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.இதனையடுத்து, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் நேற்று முதல் வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் ஏடிஎம்-களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள ஏடிஎம்-கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் புதிய 500, மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளிவராமல் 100 ரூபாய் நோட்டுகளே வருகின்றன. இதனால் மக்கள் சிறிது ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் கடந்த 2 நாட்களாக 100 ரூபாய் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த நிலையில் இன்று பணம் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close