[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து

the-coal-based-methane-gas-project-in-tamil-nadu-has-been-cancelled

தமிழகத்தில் பாறைகளைப் பிளந்து ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் எதுவுமில்லை என்று, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீத்தேன் திட்டத்தை பொறுத்தவரை சில பிரச்னைகள் இருப்பதாகவும், உள்ளூர் மக்கள்‌ எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும் கூறினார். மன்னார்குடியில், மீத்தேன் எடுப்பதற்காக ஒரே இடம் இரண்டு நிறுவனத்திற்கு தரப்பட்டிருந்ததாகவும் கூறிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்திருப்பதாகவும் தெரிவித்தார். பைப் லைன் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்திற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், கேரள அரசு ஒத்துழைப்பு ‌கொடுத்து வருவதாகவும் கூறினார். எனவே, தமிழக அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இத்திட்டத்தின் மூலம் பலர் பயன் அடைவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்‌. எத்தனால் உற்பத்தியை பெருக்க சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என்றும் தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close