[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

செல்லாக்காசான 500, 1000 ரூபாய் நோட்டுகள்.. கல்யாண வீட்டார் கடும் அவதி

rs-500-1000-notes-ban-public-suffered

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் சுபகாரியங்கள் நடைபெறும் வீட்டாரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ரூ. 500, 1000 நோட்டுகள் இன்று (புதன்கிழமை) முதல் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்தார். இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் ஐப்பசி மாதத்தில் இன்றும் நாளை மறுநாளும் வளர்பிறை முகூர்த்தம் என்பதால் இந்நாட்களில் அதிகபடியான திருமணங்கள் நடைபெற இருக்கின்றன.

இந்த அறிவிப்பால், திருமண வீட்டார்கள் தங்களது சின்னசின்ன செலவுகளுக்கான பணபட்டுவாடாவில் கூட ஈடுபட முடியாமல் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக திருமண செலவுகளுக்காக பணம் எடுப்பவர்கள் அதை ரூ.500, ரூ. 1000 நோட்டுகளாக எடுத்து வைப்பது வழக்கம். ஆகையால் தற்போது சிறு செலவுகளுக்கு கூட சில்லறை இல்லாமல் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தங்களிடம் பணம் இருந்தும் அவற்றை உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். மேலும் திருமண வீட்டிற்கு செல்லும் பொதுமக்களும் முக்கிய சம்பிரதாயமான மொய் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close