[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு பேரிடி: விஜயகாந்த்

vijayakanth-weilcomes-pm-modi-decision

கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு பேரிடியாக இருக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நேற்று நள்ளிரவு முதல் ரூ. 500 மற்றும் ரூ. 1000 செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கை லஞ்சம், ஊழல், கருப்பு பணத்தை ஒழிக்க மிகப்பெரிய உதவி செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, இந்த நடவடிக்கையை நான் மனதார வரவேற்கிறேன். சாமான்ய மக்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் லஞ்சம், ஊழல், மற்றும் கருப்பு பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருப்பவா்களுக்கு, இந்த அறிவிப்பு பேரிடியாக இருக்கும். தொலைநோக்குப் பார்வையில் பிரதமர் மோடி அவா்களின் இந்த அறிவிப்பு, இந்தியாவிற்கே ஒரு வரப்பிரசாதமாக இருக்கும், மேலும் நம் நாட்டை வல்லரசாக மாற்ற இந்த அறிவிப்பு பெரும் உதவி செய்யும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close