[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்குத் திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் நிறுத்தம்

andhra-stops-krishna-water-release-to-tn

ஆந்திராவிலிருந்து குடிநீருக்காக தமிழகத்திற்கு திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீரை விவசாயிகள் இடையிலேயே திருடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆந்திர பொதுப்பணித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கண்டலேறு அணையிலிருந்து 1,600 கனஅடி திறக்கப்படுகிறது. ஆனால், தமிழக எல்லையான ஜீரோ பாய்ண்டில் 230 கன அடி நீர் மட்டுமே வந்தடைவதாகக் கூறப்படுகிறது. இடையில் காளஹஸ்தி, வேங்கடகிரி, சத்யவேடு பகுதிகளைச் சேர்ந்த ஆந்திர விவசாயிகள், நீரை குழாய் மூலம் மோட்டார் போட்டு உறிஞ்சி பாசனத்திற்காக பயன்படுத்துகின்றனர். மின் மோட்டார், ஆயில் எஞ்சின் ஆகியவற்றின் உதவியோடு குடிநீர் உறிஞ்சப்படுகிறது. மேலும் காளஹஸ்தி பகுதியில் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மதகுகளை ஆந்திர விவசாயிகள் இரவில் திறந்து விட்டு நீரைத் திருடுவதாகவும‌ கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close