[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

தலாக் என்பது தாய்க்குலத்தின் தற்காப்பு கவசம்.. தவ்ஹீத் ஜமா அத் தீர்மானம்

resolution-for-favouring-triple-talaq

‘தலாக் என்பது தாய்க்குலத்தின் தற்காப்பு கவசம்’ என திருச்சியில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு சார்பில் நடைபெற கண்டன பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முஸ்லீம் மதத்தில் பின்பற்றப்படும், மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறும் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு‌ சார்பில், மாநிலம் தழுவிய கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற இந்த கண்டன பொதுக் கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து பெண்கள், குழந்தைகள் என 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் ஒரே சட்டம் கொண்டுவர முயலும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பொதுக்கூட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல் தீர்மானத்தில், தலாக் என்பது தாய்க்குலத்தின் தற்காப்பு கவசம் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்லாம் ஆண்களுக்கு விவாகரத்து உரிமை வழங்கியுள்ளதுபோல், பெண்களுக்கும் வழங்கியுள்ளதால் இஸ்லாம், பெண்களுக்கு அநீதி இழைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து பெறுவதற்காக ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்துதல் இஸ்லாமிய விவாகரத்து முறையினால் தவிர்க்கப்படுவதாக இரண்டாவது தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. விபச்சாரம் செய்வது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து குடும்பப் பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல்வேறு மத, இன,பண்பாடு, கலாச்சாரம் கொண்ட இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்றும் மற்றொரு தீர்மானம் வலியுறுத்துகிறது. இது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close