[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமெரிக்காவின் வால்மார்ட் உள்பட இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS ரஜினியின் அரசியல் பிரவேசம் காலம் கடந்தது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

திமுகவின் நட்சத்திர பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மறைவு

thee-pori-arumugam-died

தி.மு.க.வின் தலைமைக் கழக பேச்சாளரான தீப்பொறி ஆறுமுகம் உடல் நலக் குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் காலமானார்.அவருக்கு வயது 78.

தீப்பொறி ஆறுமுகத்திற்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம், இளவயதிலேயே தி.மு.க.வில் இணைந்து, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசியவர். குறிப்பாக அ.தி.மு.க.வையும், அக்கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை கடுமையான சொற்களால் பேசி புகழ்பெற்றவர் தீப்பொறி ஆறுமுகம்.

தி.மு.க தலைவருடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, 2001ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சியளித்தார். சில ஆண்டுகாலம் அங்கிருந்த தீப்பொறி ஆறுமுகம், கடந்த 2010ல் மீண்டும் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதைதொடர்ந்து தி.மு.க மேடைகளில் எதிர்க்கட்சிகளை கடுமையாக பேசி வந்த ஆறுமுகம், உடல் நலக் குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, தீப்பொறி ஆறுமுகத்தை சந்தித்து நலம் விசாரித்த தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார். திமுகவில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தீப்பொறி ஆறுமுகம் சுமார் 50 ‌ஆண்டுகளாக குறிப்பிட‌த்தக்க மேடைப் பேச்சாளராக திகழ்ந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close