[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

அறிமுகமாகும் எலக்ட்ரானிக் தபால் ஓட்டு..

eci-conducts-pilot-of-electronic-transmitted-postal-ballot-for-service-voters-in-nellithope-assembly

இடைத்தேர்தல் நடைபெறும் புதுச்சேரி நெல்லித்தோப்புத் தொகுதியில் தபால் வாக்குகளை பதிவு செய்ய புதிய முறையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது உள்ள முறையில் வாக்குச்சீட்டுகள் வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு அவர்கள் பதிவு செய்யும் வாக்குகளும் தபால் மூலமே பெறப்படுகின்றன. இதனால் ஏற்படும் காலவிரயத்தை குறைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மின்னணு முறை வாக்குச்சீட்டை அளிக்கும் அமைப்பு என்கிற முறையில் தபால் வாக்கு அளிக்க தகுதியுடைய வாக்காளர்களுக்கு மின்னணு முறையில் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் ஓடிபி (OTP) என‌ சொல்லப்படுகிற ஒருமுறை கடவுச் சொல் மற்றும் பின் (PIN) என்று சொல்லப்படுகிற ரகசிய எண்ணை கொண்டு தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்குச்சீட்டுகளை தரவிறக்கம் செய்து அச்சிட்டுக்கொள்ள முடியும். பின்னர் அவர்கள் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டில் தங்கள் வாக்கை பதிவு செய்து தபால் மூலம் அனுப்பிவைக்கவேண்டும். இந்த புதிய முறை நெல்லித்தோப்பு தொகுதியில் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close