[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

தொடரும் துப்புரவு பணியாளர்களின் அவலம்

sanitary-workers-in-cuddalore-municipalty

கடலூரில் துப்புரவு பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படாத அவலம் நீடிக்கிறது.

கடலூரில் கடந்த சில நாட்களாக கால்வாய் சுத்தம் செய்யும் பணியில், எந்தவிதமான பாதுகாப்பு கவசமும் இல்லாமல், நகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவதை சுட்டிக்காட்டி புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக உடனடியாக நகராட்சி ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், நகராட்சியில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் வெளியூர்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக துப்பரவு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, மழைநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபடுத்தியுள்ளது. ஆனால், அவர்களுக்கு தேவையான எந்த பாதுகாப்பு கவசமும் வழங்காமல் பணியில் ஈடுபடுத்தி வருவதை பார்க்க முடிகிறது. பாதுகாப்பு இல்லாமல் துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றுவது மட்டும் அல்லாமல், அகற்றப்படும் அபாயகரமான கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுகின்றனர்.

இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல், நோய் பரவும் ஆபத்தும் இருப்பதாக கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள். இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷிடம் கேட்டதற்கு விசாரிப்பதாக கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close