[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

தொடரும் சோகம்..வாடிய பயிரைக் கண்டு மேலும் 2 விவசாயிகள் உயிரிழப்பு

two-more-farmers-died-in-delta-districts

மன்னார்குடி விவசாயியின் மரணம் இன்று தெரியவந்த நிலையில், தஞ்சை மற்றும் திருத்துறைப்பூண்டியிலும் விவசாயிகள் கருகிய பயிரை கண்டு மனம் நொந்து உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

விளைநிலைத்தைப் பார்வையிட்டு வருவதாக மனைவியிடம் கூறிச் சென்ற தஞ்சையைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா எனும் விவசாயி, விளைநிலத்திலேயே மயங்கி விழுந்தார். நேரடி நெல்விதைப்பு மூலம் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் நடவு செய்த அந்த விவசாயி, மழை இல்லாமல் கருகிய பயிர்களைக் கண்டதால் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த இருநாட்களில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆதிச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த அழகேசன் எனும் இளம் விவசாயி நேற்று உயிரிழந்தநிலையில், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் எனும் விவசாயியும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் மழை பொழியும் என்ற எதிர்பார்ப்பிலும், நீர்மட்டம் குறைந்ததாலும் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் நீர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. இதனால், நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகளில் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close