[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

தனியார் நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்: கருணாநிதி

reservation-for-obcs-in-private-organizations-karunanidhi

தனியார் துறையில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் நடத்தும் பெரிய நிறுவனங்கள், ‌மருத்துவமனைகள், பள்ளிகள், அறக்கட்டளைகள் போன்றவற்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக அதன் உறுப்பினர் ஷகீல் உஸ்மான் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் இந்த பரிந்துரைக்கு கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். நடைமுறைக்கேற்ற இந்த பரிந்துரையினை மத்திய அரசு முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close