[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

புதியதலைமுறை செய்தி எதிரொலி: சேலம் இளைஞரிடம் லஞ்சம் வாங்கிய 4 பேர் பணியிடை நீக்கம்

pt-impact-four-suspended-in-tneb-over-bribe-scam

சேலத்தில் சுயதொழில் தொடங்க முயன்ற இளைஞரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் மின்வாரியத்தைச் சேர்ந்த 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுரேந்திரன்‌. கட்டட பொறியாளரான‌ இவர், சரணாலயம் என்ற அமைப்பைத் தொடங்கி சமூக சேவை செய்து வருகிறார். கலப்படமற்ற கடலை எண்ணெய் தயாரிக்கும் தொழில் தொடங்க முயன்று அனுமதிகளுக்காக அணுகிய போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார் தெரிவித்தார்.

மேலும், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய ரகசிய வீடியோ பதிவுகளை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் புதிய தலைமுறைக்கு அவர் அளித்தார். அந்த காட்சிகளை பிரத்யேகமாக ஒளிபரப்பியது புதிய தலைமுறை.

இந்தநிலையில், இளைஞர் சுரேந்திரனிடம் லஞ்சம் பெற்ற புகாரில் மின்வாரிய ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மின்வாரியத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் வேணுகோபால், இளநிலை பொறியாளர் சரவணன் மற்றும் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close