[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தம்

rameshwaram-fishermen-one-day-strike

மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, இந்திய- இலங்கை அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற இந்திய - இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் 116 படகுகளை விடுவிக்க தமிழக மீனவர்கள் வலியுறுத்தினர். ஆண்டிற்கு 83 முறை பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர். ஆனால் இதனை இலங்கை மீனவர்கள் திட்டவட்டமாக மறுத்தனர்.

இந்நிலையில், நாளை உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதையொட்டி ராமேஸ்வரத்தில் 13 மீனவ சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், நாளை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.

இதனிடையே, டெல்லியில் நாளை நடைபெறும் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் மீனவர்கள் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என 13 மீனவ சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close