[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

நீதிபதி வீட்டில் பணியில் இருந்த போது சிரித்துப் பேசிய காவலருக்கு 'மெமோ'

sp-sends-memo-to-police-for-laughing-while-onduty

ஈரோடு மாவட்ட நீதிபதி வீட்டில் பணியில் இருந்த போது சிரித்து பேசி நீதிபதிக்கு இடையூறாக இருந்ததாக கூறி ஆயுதப்படை காவலருக்கு விளக்கம் கேட்டு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட நீதிபதி முருகன் வீட்டில் பாதுகாப்பு பணிக்காக ஆயுதப்படை காவலர்கள் பணியமர்த்தபட்டுள்ளனர். சுழற்சி அடிப்படையில் இந்த காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் வடிவேல் என்பவர் சக காவலர்கள் தங்கராஜூ மற்றும் நந்தீஸ்வரன் ஆகியோருடன் உரக்க சிரித்து பேசியதாக கூறப்படுகிறது. அவரின் இந்த செயல் நீதிபதிக்கு இடையூறாக இருந்தாக புகார் செய்யப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமார், பாதுகாப்பு அறையில் உரக்க பேசி சிரித்து நீதிபதிக்கு இடையூறு ஏற்படுத்தியது கண்டிக்கதக்கது என கூறி ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு விதிகள் 1955 பிரிவு 3-ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், இது குறித்து 15 தினங்களுக்குள் கட்டாயமாக தவறுக்கான மறுப்புரை கொடுக்க வேண்டும் என்று ஆயுதப்படை காவலர் வடிவேலுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவிவருவதால் போலீசாரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close