[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

பேருந்தின் கண்ணாடியை உடைத்த காட்டுயானை

after-breaking-the-glass-of-the-government-bus-attack-by-elephant

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை, பேருந்தின் கண்ணாடியை உடைத்து துவம்சம் செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது தற்போது வீடியோ வாக வெளிவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது கொளப்பள்ளி. இங்கிருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. எலியாஸ் கடை என்ற இடத்தின் அருகே அந்த அரசு பேருந்து வந்தபோது, பல வருடங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் காட்டு யானை மக்னா, சாலையின் குறுக்காக நின்று பேருந்தை வழிமறித்துள்ளது. இதையடுத்து, பிரத்யேக பிரேக்கை பிடித்து, அரசு பேருந்து ஓட்டுநனர், பேருந்தை நிறுத்தியுள்ளார்.

யானை வழிமறித்ததால் பேருந்து நின்று கொண்டிருப்பதை அறியாமல், பேருந்திற்கு பின்னால் வந்த காரின் ஓட்டுனர், தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இந்த ஹாரன் சப்தத்தால் மேலும் ஆத்திரமடைந்த காட்டு யானை மக்னா, திடீரென அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து துவம்சம் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடிப்படி, பேருந்தின் பின்பக்க கதவு வழியாக இறங்கிச் சென்று உயிர்தப்பினர். பலவருடங்களாக இப்பகுதியில் சுற்றிவரும் காட்டுயானையை, இனியாவது பிடித்து, முதுமலைக்கு கொண்டு செல்லுமாறு, வனத்துறைக்கு பொதுமக்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close