[X] Close
JUST IN

பாட்டிலால் குத்தப்பட்ட மாணவியின் உயிருக்கு ஆபத்தில்லை: மருத்துவர்கள் தகவல்

coimbatore-student-out-of-danger

கோவையில் நேற்று பாட்டிலால் குத்தப்பட்டு தாக்குதலுக்கு ஆளான மாணவியின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை டவுன்ஹால், உப்பாரவீதியை சேர்ந்த மாடசாமி என்பவருடைய மகள் கனகலட்சுமி. இவர் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று பல்கலைக்கழகத்திற்கு அருகே கனகலட்சுமியை வேம்புராஜ் என்பவர் பாட்டிலால் குத்தியுள்ளார். இதில் நிலைக்குலைந்த மாணவி கனகலட்சுமியை சகமாணவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவியின் உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் உயிருக்கு ஆபத்தில்லை எனவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது சக மாணவர்கள் துரிதமாக செயல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்ததே மாணவி உயிர்பிழைக்க ‌காரணம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே கனகலட்சுமியை பாட்டிலால் குத்திய வேம்புராஜை வடவள்ளி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் வேம்பு ராஜ் தேனி மாவட்டம் முதுகுளத்தூர் வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் என்பதும், முகநூல் மூலம் மாணவி கனகலட்சுமியுடன் நட்பு வட்டாரத்தில் இருந்தாதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் கனகலட்சுமியை இவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் கனகலட்சுமி காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வேம்புராஜ் அவரை பாட்டிலால் குத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close