[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

தேமுதிக-வுக்கு மக்கள்நலக் கூட்டணி ஆதரவா?: வைகோ விளக்கம்

people-welfare-alliance-supports-dmdk-vaiko-explains

மூன்று தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்கு மக்கள் நலக் கூட்டணி ஆதரவில்லை என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகா ஆகியவை ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தது. இதில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் இக்கூட்டணி தோல்வியையே தழுவியது.

இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக தனியாக தனது வேட்பாளர்களை அறிவித்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் 3 தொகுதி தேர்தலில் போட்டியிடாது என அதன் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

எனவே இந்த 3 தொகுதி தேர்தலில் தேமுதிக-விற்கு மக்கள் நலக் கூட்டணி ஆதரவு அளிக்குமா? என்பது பலரின் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மூன்று தொகுதி தேர்தலில் தேமுதிகவுக்கு மக்கள்நலக் கூட்டணி ஆதரவு அளிக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வைகோ, ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close