[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு

நீலகிரியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை..!!

the-leopard-cage-to-catch-the-action-in-the-nilgiris-district-forest

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ள நம்பியார்குன்னு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரு மாநில வனத்துறையினரும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கேமரா பொருத்தி சிறுத்தையை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூட்டாக இரு மாநில வனத்துறையினரும் ஆய்வு செய்தனர். நம்பியார்க்குன்னு, புதுசேரி ஆகிய இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். புதுசேரி பகுதியில் சிறுத்தை தாக்கியதில் கடந்த 3 நாட்களில் 4 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close