[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

தமிழகம், புதுவையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

assembly-election-139-candidates-filed-nomination-in-3-constituency

தமிழகத்தின் மூன்று தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலில் 139 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். ‌இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது.

தஞ்சை தொகுதியில் அதிமுக சார்பில் ரெங்கசாமி, திமுக சார்பில் அஞ்சுகம் பூபதி உட்பட ‌36 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில்பாலாஜி, திமுக சார்பில் கேசி பழனிச்சாமி உள்ளிட்ட 59 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ கே போஸ், திமுக சார்பில் டாக்டர் சரவணன் உள்ளிட்ட 44 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம் சக்தி சேகர் உள்ளிட்ட 14 பேர் களத்தில் உள்ளனர். இந்த 4 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் முடிந்ததையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி வாக்குப் பதிவு நடக்க உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close