[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

செங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கிரி கைது

sengam-dmk-mla-giri-arrested

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுகவைச் சேர்ந்த செங்கம் பேரூராட்சித் தலைவர்‌ முருகனைக் கொல்ல முயற்சி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், செங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருவண்ணாமலை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திமுக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்கம் பகுதியில் தி.மு.கவினர் மீது தொடர்ச்சியாக பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், காவல்துறையினர் விசாரணையின்றி திமுக-வினர் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்.

சாலைமறியல் சம்பவத்தால், காவல்துறையினருக்கும் தி.மு.கவினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட திமுக-வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close