[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

மன்னார் வளைகுடாவில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் பீதி

sea-furious-in-pamban-mannarvalaikuta

பாம்பன் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

மன்னார்வளைகுடா சின்னப்பாலம் கடல் பகுதியில் நேற்று திடீரென சுமார் 100 மீட்டர் தொலைவு கடல் உள்வாங்கியது. இதனால் கரையில் நிறுத்தபட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தது.

கடந்த சில நாட்களாக மன்னார்வளைகுடா கடல்பிராந்தியத்தில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்துவந்தது இதனால் ராட்சத அலைகளால் உருவாகி பாம்பன் சின்னப்பாலம் குந்துகால் தெற்குவாடி மற்றும் மண்டபம் தெற்குப் பகுதி நாட்டு படகு மீனவர்கள மீன்பிடிக்கச்செல்லாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.இந் நிலையில் இன்று திடீரேன சின்னப்பாலம் கடல் பகுதியில் சுமார் 100 மீட்டர் தொலைவு கடல் உள்வாங்கியது இதனால் கரையில் நிறுத்ப்பட்டிருந்த 30 க்கும் க்கும் மேற்ப்பட்ட படகுகள் சேதமடைந்தது.

மேலும் கடலுக்குச் சென்றவர்களும் பெரும் நஷ்டத்தோடு கரை தீரும்பியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் சுனாமிக்குப்பின் அடிக்கடி கடலில் மாற்றங்கள் ஏற்பட்டுவருகிறது வரும் மழைக்காலங்களில் கடல் நீர் நாங்கள் வசிக்கும் பகுதிக்குள் உள்ளே புகுந்து வீடுகளையும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்டுத்தி வருவதால் அரசு இவ்வாறான காலங்களில் எங்களுக்கு முழுமையான பாதுகாப்பு தர வேண்டும் எனவும் சுனாமி வீடுகள் இல்லாத மீனவர்களுக்கு சுனாமி வீடுகள் கட்டித்தர வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close