[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS காஷ்மீருக்கு இன்று சென்று பார்வையிட ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டம். கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

வீடுகளை சொந்தமாக்கும் கனவு 'இடிந்து தரைமட்டம்'... வீடுகளை வாங்கியவர்கள் கண்ணீர்...!

moulivakkam-building-demolition-many-families-affected

இடிந்து தரைமட்டமான மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடத்தில் வீடு வாங்கியவர்கள், வங்கிக் கடனை செலுத்துவதிலிருந்து மீள இயலாமல் அல்ல‌ல்பட்டு வருகின்றனர்.

கடந்த 2014 ஜூன் 28‌- ம் தேதியன்று இடிந்து விழுந்த அந்தக் கட்டடத்தில் 76 பேர் வீடுகளை வாங்கியிருந்தனர். சராசரியாக ஐம்பது லட்சம் என்ற தொகைக்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டன. பெரும்பாலானோர் வங்கியில் கடன் பெற்றுத்தான் வீடுகளை வாங்கியுள்ளனர்.

வீடுகளை சொந்தமாக்கும் கனவு தரைமட்டமான போதிலும், வாங்கிய வங்கிக் கடனிலிருந்து மீள இயலாமல் ‌அவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மாதம் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வங்கியில் கடன் செலுத்தி வருவதாக வீடுகளை வாங்கியவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். அடுக்குமாடிக் கட்டத்தை கட்டிய நிறுவனம் இதுவரை எந்தவிதமான பதிலும் தராததால் இது தொடர்பான வழக்கு தேசிய நுகர்வோர் அமைப்பில் வழக்கு நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close