[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

மவுலிவாக்கத்தில் உள்ள மற்றொரு கட்டடம் நாளை இடிக்கப்படும்: தமிழக அரசு

2nd-tower-of-11-storeyed-building-at-moulivakkam-to-be-demolished-on-nov-2

மவுலிவாக்கத்தில் உள்ள மற்றொரு கட்டடம் நாளை இடிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த 11 மாடிக் கட்டடம் 2014ஆம் ஆண்டு ஜூன் 28-ல் திடீரென்று சரிந்து விழுந்தது. அந்த கோரவிபத்தில் 61 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இடிந்துவிழுந்த கட்டடத்தின் அருகிலுள்ள மற்றொரு கட்டடமும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அதையும் இடிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க, தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், மற்றொரு கட்டடத்தை இடிக்க கடந்த மே 12-ல் உத்தரவிட்டது.

இந்தநிலையில் மவுலிவாக்கத்தில் உள்ள மற்றொரு கட்டடம் நவம்பர் 2-ம் தேதி இடிக்கப்படும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டடத்தை இடிக்கும் ஆயத்தப் பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து முடித்துள்ளதாகவும் சிஎம்டிஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close