[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

காவிரிப் பிரச்னையில் தமிழக கட்சிகளிடையே ஒற்றுமையில்லை: மு.க.ஸ்டாலின்

cauvery-issue-mk-stalin-speech-at-madurai

காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்து போராடவில்லையென்று, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தேர்தலை ஒட்டி மதுரையில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கர்நாடகாவில் பல்வேறு கட்சிகள் அரசியல்ரீதியாக முரண்பாடு கொண்டிருந்தாலும், மாநிலத்தின் நலன் என்ற அடிப்படையில் காவிரி பிரச்னையில் ஒற்றுமையுடன் இருக்கின்றன. ஆனால் தமிழக கட்சிகளிடம் ஒற்றுமையில்லை.

கடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு தி.மு.க. வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இன்று சிறந்த எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெற்றுள்ளோம். ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பதால் தி.மு.க.வினர் சோர்ந்து விடவில்லை. தமிழக நலனுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம் என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close