[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

3 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அரசு மருத்துவமனையிலிருந்து குழந்தையைக் கடத்திய பெண்

child-abucted-from-salem-govt-hospital-rescued-from-dharmapuri

திருமணமாகி 3 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை பெண் ஒருவர் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து, இந்து-வெங்கடேஷ் தம்பதியின் ஆண் குழந்தை கடந்த 26ம் தேதி கடத்தப்பட்டது. பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை, தாய் கழிவறைக்குச் சென்றிருந்த போது கடத்தியது தெரியவந்தது.

குழந்தை கடத்தல் குறித்து மருத்துவமனை சிசிடிவி காட்சி பதிவுகள் கொண்டு ஆய்வு செய்த போலீசார், குழந்தையைக் கடத்தியது பெண் என்பதை உறுதி செய்தனர். தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையை கடத்திச் சென்ற பெண் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தையை போலீசார் கொண்டுவந்தனர். விசாரணைக்குப் பின்னர் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாநகர காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜார்ஜ், திருமணமாகி 3 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், குழந்தையை அந்த பெண் கடத்தியது தெரிவந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close