[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

தொடங்கியது பருவமழை!.... தப்பியது ஒருபோக சாகுபடி?

north-east-monsoon-rains-started

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று  வெளியிட்டார். தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை, ஆண்டுதோறூம் அக்டோபர் இறுதியில் தொடங்கி டிசம்பர் வரை நீடிப்பது வழக்கம்.

கியான்ட் புயலின் தயவால் அக்டோபர் 27ம் தேதியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பருவமழை, சென்னை வானிலை ஆய்வு மையம் முன்பு கூறியது போலவே அக்டோபர் 30ம் தேதி தொடங்கியிருக்கிறது.

தென்னிந்தியா முழுவதும் ஈரப்பதம் மிகுந்த காற்று பரவியுள்ளதால் மழை பெய்துள்ளதாகவும், மேலும் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு பருவ மழை சராசரியாகவோ அல்லது அதை விட குறைவாகவோ இருக்கும், 39 செ.மீ முதல் 44 செ.மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் திருவையாறு 7 சென்டி மீட்டர் மழையும், வலங்கைமான், தொழுதூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

காவிரியில் கர்நாடகா சரியாக தண்ணீர் திறந்துவிடாததால் தமிழகத்தில் விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறிவருகின்றன. தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவு பெய்யாததால், மூன்று போகம் விவசாயம் செய்யும் விவசாயிகள் தற்போது ஒரு போகம் மட்டுமே சம்பா நெல் சாகுபடி செய்கின்றனர். அந்த ஒரு போகமும் வடகிழக்கு பருவமழையை நம்பியே இருக்கிறது. இந்த நிலையில் பருவமழை தொடங்கியது என்ற அறிவிப்பு விவாசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close