[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி போட்டியிட தடையில்லை... உச்ச நீதிமன்றம்

senthil-balaji-compete-bigotry-supreme-court

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி போட்டியிட தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த மே 16ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்களர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழகியதாக எழுந்த புகாரை அடுத்து அத்தொகுதி தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதே காரணத்தால் தஞ்சாவூர் தொகுதி தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ சீனிவேல் உடல்நலக் குறைவு காரணாமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த 3 தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் முன்பு போட்டியிட்ட செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை ஜெயராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் செந்தில் பாலாஜி மீது நிறைய புகார்கள் இருப்பதால், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, வேட்பாளர் மீது புகார்கள் இருந்தால், களத்தில் இறங்கி மக்களிடம் எடுத்து கூறுமாறு மனுதாரரை அறிவுறுத்தினர். இது தேர்தல் தொடர்பான கோரிக்கை என்றும், தேர்தல் ஆணைய விஷயத்தில் தலையிட முடியாது என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close