[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி அமலாகிறது உணவுப் பாதுகாப்புச்சட்டம்

tamil-nadu-to-implement-national-food-security-act-from-november-1

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பொது விநியோகத்திட்டத்திற்கு எந்தப் பாதிப்பும் வராமல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அர‌சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவி‌க்‌கப்பட்டுள்ளது. பொது விநியோகத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதால் தமிழக அரசுக்கு ஆயிரத்து 193 கோடிய‌ 30 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தொடர்ந்து பயன்பெறும் வகையில் இச்சட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது: தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இருந்தால் மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும் என்றும் ஆனால், தற்போது ஒரு நபர்‌ மட்டுமே உள்ள குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 12 கிலோ அரசி வழங்கப்பட்டு வருகிறது. அதே அளவினைத் தமிழக அரசு தொடர்ந்து வழங்கும் . தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் படி ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்கள் இருந்தால் மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும். ஆனால், தமிழக அரசு தற்போது வழங்கும் 16 கிலோ அரிசி தொடர்ந்து வழங்கப்படும் . 3 முதல் 10 நப‌ர் வரை கொண்ட குடும்பங்களுக்கு தற்போது 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி இனி அந்த அளவு அதிகரிக்கப்படும் . அதன் படி 5 ‌ உறுப்பினர்கள் உள்ள குடும்பத்திற்கு இனி 25 கிலோ அரிசியும், 6 பேர் கொண்ட குடும்பங்களுக்கு இனி 30 கிலோ அரிசியும் 7 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசியும், 8 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 40 கிலோ அரிசியும், 9 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 45 கிலோ அரிசியும், 10 பேர் கொண்ட குடும்பத்திற்கு 50 கிலோ அரிசியும் வழங்கப்படும்’ இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள‌து.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close