[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தடை

108-ambulance-staff-plan-strike-on-deepavali-hc-stays-order

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போனஸ் கேட்டு, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கடந்த ஆண்டில் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால், இது சட்ட விரோதம் என கூறிய உயர் நீதிமன்றம், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்று போராட்டத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில்;8 மணி நேர வேலை, போனஸ் உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வரும்‌ 28ம் தேதி முதல் 29ம் தேதி இரவு வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் பேட்ரிக் என்பவர் , கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையையும் மீறி, 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ‌சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக, உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு , 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்று கடந்தாண்டே தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த உத்தரவு இந்தாண்டும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close