[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

ஆதார் எண்ணை குடும்ப ‌அட்டையோடு இணைக்க காலக்கெடு இல்லை

aadhar-card-link-with-ration-card-tamilnadu

ஆதார் எண்ணை குடும்ப ‌அட்டையோடு இணைக்க காலநிர்ணயம் ஏதும் செய்யப்படவில்லை என்று தமிழக உணவுத்துறை தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்த பிறகு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருவதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மாட் கார்டு வழங்குவதற்கான பணிகளையும் உணவுத்துறை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் சரியாக விநியோகிக்கப்படுகிறதா என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை ராயப்பேட்டை‌யிலுள்ள ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய உணவுத் துறை அதிகாரிகள், ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைப்பதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறினர். எனினும், விரைவாக ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் மக்கள் இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close