JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
தமிழ்நாடு 25 Oct, 2016 07:52 PM

பத்து நாட்களில் 7 பேர் உயிரிழப்பு... மர்மநோய் அச்சத்தில் கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை கிராமத்தில் உடல்நலக் குறைவால் கடந்த 10 நாட்களில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஜோசப் என்பவர் இன்று காலை உயிரிழந்ததை அடுத்து, தண்டரை கிராமத்தில் சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு ஏற்படுவதும் அதன்பின்னர் ஓரிரு நாட்களில் உயிரிழப்பதும் நிகழ்வதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். குழந்தைகள் உடல்நல பாதிப்புக்கு விரைவில் ஆளாகி விடுவதால், தண்டரை கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான குழந்தைகள் உறவினர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தண்டரை கிராமத்தில் 7 பேர் உயிரிழந்தது தொடர்பாகத் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சத்தை போக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads