[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வாழ்த்து.. அப்போலோவில் உம்மன் சாண்டி பேட்டி

ommen-chandy-about-cheif-minsiter-jayalalithaa-health-condition

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வாழ்த்துவதாக, கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோ வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22–ஆம் தேதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் அமைச்சருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து வருகின்றனர். ராகுல் காந்தி, அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் அப்போலோ மருத்துவனை வந்து மருத்துவர்களிடம் ஜெயலலிதா நலம் குறித்து விசாரித்து சென்றனர்.

அந்தவகையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளா ஆளுநர் சதாசிவம் ஏற்கனவே அப்போலோ வந்துசென்று விட்ட நிலையில் தற்போது கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி இன்று அப்போலா வந்தார். அங்கு மருத்துவர்கள், அமைச்சர்களிடம் முதலமைச்ரிடன் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வாழ்த்துவதாக தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close