[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

'மாண்புமிகு' ஆளுநர் என அழைக்க வேண்டும்.... வித்யாசாகர் ராவ் உத்தரவு

governor-order-to-call-honourable-governor

ஆளுநரை இனி ‘மாண்புமிகு ஆளுநர்’ என்றே அழைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசு விழாக்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் மாண்புமிகு ஆளுநர் என பயன்படுத்துமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வழக்கத்திலுள்ள ‘மேதகு ஆளுநர்’ என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், வெளிநாட்டினருடனான கலந்துரையாடலின்போது ஆளுநரை மேதகு ஆளுநர் என அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேதகு என்ற அடைமொழியுடன் தம்மை குறிப்பிட வேண்டாம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2012ஆம் ஆண்டே அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close