[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

3 தொகுதி தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும்... வைகோ அறிவிப்பு

boycott-3-constituency-election-vaiko-announced

மூன்று தொகுதி தேர்தல்களை மக்கள் நல கூட்டணி புறக்கணிப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நடந்தது. அப்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்தன. எனவே அங்கு தேர்தல் நடத்துவதை நிறுத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. சீனிவேல் உடல் நலக்குறைவால் காலமானார்.

காலியாக உள்ள தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி, கடந்த மே மாதம் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல்களும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலும் அடுத்த மாதம் 19–ந் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனையடுத்து கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அதிமுக, திமுக தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் நடைபெறும் தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பதாக என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் நேர்மையாக நடைபெறாது என்ற காரணத்தினால் அதனை புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close