[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

திமுக-விற்கு தார்மீக உரிமை இல்லை.. காவிரி பிரச்னையில் பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்

pon-radhakrishnan-alleged-dmk-in-cauvery-issue

காவிரி பிரச்னை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவதற்கு திமுகவுக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து திமுக சார்பில் தஞ்சையில் கடந்த 7-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதேபோல்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக எம்.பி.க்கள், கடந்த வாரம் குடியரசுத் தலைவரையும் நேரில் சந்தித்து முறையிட்டனர்.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் வரும் 25-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சிகளுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்ட திமுக-விற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என சாடியுள்ளார். மேலும், காவிரி பிரச்னையின் தற்போதைய நிலைக்கு திமுகவும் காங்கிரசும் தான் காரணம் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளதை திமுகவும் காங்கிரசும் ஒப்பு கொண்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு கைகோர்க்க தயார் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close