[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

சாத்தூரில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்.. துப்பாக்கி வாங்கி கொடுத்தவர் கைது

sattur-murder-case-one-arrested

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கருப்பசாமி என்பவர் அரசுப் பேருந்தில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், கொலை செய்ய துப்பாக்கி வாங்கிக் கொடுத்தவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 12-ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து சாத்தூரில் வந்த போது கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமியை இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த முகமது ரஃபிக் என்பவர் மதுரை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரிடம் சாத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கருப்பசாமி கொலைக்காக துப்பாக்கி வாங்கிக் கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூர் பகுதியில் பதுங்கியிருந்த ராபர்ட் கென்னடி என்பவரை சாத்தூர் போலீஸார் கைது செய்தனர். கைதான ராபர்ட் கென்னடி மணிப்பூரை சேர்ந்தவர் ஆவர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close