[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

கடந்த ஆண்டு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு உத்தரவு

omni-bus-charge-case-madurai-high-court-ordered

கடந்த ஆண்டு பண்டிகைக் கால கட்டணத்தையே வசூலிக்குமாறு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களை எப்படியாவது சொந்த ஊரில் கொண்டாடிட வேண்டும் என்பதே வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் பெரும்பாலான மக்களின் நினைப்பாக உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் பல்வேறு ஆம்னி பேருந்துகள் பண்டிகை காலங்களில் தங்கள் இஷ்டத்திற்கு கட்டணத்தை நிர்ணயம் செய்துவிடுகின்றன.

இந்நிலையில், தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து தாமாகவே முன்வந்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்தது.

வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ள நீதிபதிகள், சென்ற ஆண்டு பண்டிகைக்கால கட்டணத்தையே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வசூலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதிகாரிகள் முறையாக கண்காணிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close