[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு

mullai-periyaru-dam-water-exposure-reduction

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து‌ தமிழகத்திற்கு திறக்கப்படும்‌ நீரின் அ‌ளவு 250 ‌கன அடியிலிருந்து 200 கன அ‌‌டியாக குறைக்‌கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணைக்கான நீர்வரத்து முற்றாக குறைந்துபோனதால், நீர்மட்டம் 109 ‌அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள நீரில், 100 கன‌அடி நீர் குடிநீருக்கு போக, மீதமுள்ள 100 கன அடி நீர் மட்டுமே பாசனத்திற்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தேனி மாவட்டம் கம்பம் பள்ளதாக்கு பகுதிகளில் சாகுபடி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 104 அடிக்கு மேல் உள்ள நீரை மட்டுமே தமிழகத்திற்கு திறக்கமுடியும் என்பதால் தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தஞ்சைக்கு அடுத்தபடியாக நெற்களஞ்சியமாக கம்பம் பள்ளதாக்கு பகுதி விளங்குகிறது. இந்த பகுதியில் ஆண்டு தோறும் சுமார் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக விவசாயம் நடக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close