[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

ஆன்மீக சுற்றுலா சென்ற 250 தமிழர்கள் நேபாளத்தில் சிக்கித் தவிப்பு

250-tamilans-stranded-in-nepal-seeks-governments-help

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 25‌0-க்கும் மேற்பட்டோர் திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமானுஜர் அறக்கட்டளை மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்டோரை கடந்த வாரம் ஆன்மீக சுற்றுலாவிற்கு நேபாளம் அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் அவர்களிடமிருந்த பணம் முழுவதையும் வாங்கி கொண்டு பாதிவழியிலேயே விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் நேபாளம் நாட்டில் பொக்கார என்ற இடத்தில் சிக்கியுள்ளனர்.

சுற்றுலா சென்றவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் 60 வயதை கடந்தவர்கள் என்பதால் கொண்டு சென்ற மருந்துகள் தீர்ந்த நிலையில் பெரிதும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பணம் இல்லாததால் நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களை தமிழகம் திரும்புவதற்கு மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close