[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

விவசாயிகள் தற்கொலையை தமிழக அரசு மறைத்தது ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

why-tn-government-hide-farmers-suicide-mk-stalin

தமிழக விவசாயிகளின் தற்கொலை விவரங்களை உச்சநீதிமன்றம் அமைத்த தொழில் நுட்பக் குழுவிடம் தமிழக அரசு மறைத்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவேரி படுகையில் உள்ள கள நிலவரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜா தலைமையிலான தொழில் நுட்பக் குழு தனது அறிக்கையில், தமிழக விவசாயிகளின் நியாயத்தை உச்சநீதிமன்றத்தின் முன்பு எடுத்து வைக்கத் தவறி விட்டதாக கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகள் படும் துயரம் குறித்தோ, காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்தோ தனது அறிக்கையில் தொழில் நுட்பக் குழு எதையும் முன் வந்து கூறாதது வேதனையளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடக்கும் விவசாயிகள் தற்கொலையை மட்டும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள காவிரி தொழில் நுட்பக் குழு, தமிழகத்தில் நடைபெற்ற விவசாயிகளின் தற்கொலைகளை சுட்டிக்காட்டாமல் புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரி நீர் திறந்து விடாததால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட முக்கியமான தகவலை அதிமுக அரசு காவிரி தொழில் நுட்பக் குழுவிற்கு தெரிவிக்க தவறி விட்டது எனவும் தமிழக விவசாயிகள் தற்கொலை விவரங்களை மறைத்த அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்-

கர்நாடக சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே கர்நாடக மாநில அரசை தட்டிக் கேட்க மத்திய அரசு தயங்குவதாக குற்றம்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யாமல் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு தயக்கமின்றி முன் வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close