[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக

பருவ மழையை எதிர்கொள்வது எப்படி?: அமைச்சர் ஆலோசனை

preparedness-for-the-north-east-monsoon-meeting

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எழிலகத்தில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சராசரி அளவைவிட அதிகமாக பெய்தது. மேலும் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்கள் பெரிதும் அவதியுற்றனர்.

இந்நிலையில் இந்தாண்டு அக்டோபர் மாதம் ‌20-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை‌‌ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ‌வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, தமிழகத்தில் ‌3 பிரிவுகளாக பிரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்ட‌‌மிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு தயார்நிலையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம் முழுவதும் அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் முன்னெச்சரிக்கை பணிகள் முடிக்கப்படும் என்றும் ‌அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே தமிழக அரசால் நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

கடந்த முறை அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதா‌கவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close